Sunday, 25 February 2018

மழலையின் கீதை .. பாகம் 3

மழலையின் கீதை  ..  பாகம் 3  
  
                                                               பொருளடக்கம்  
                                                   
                                                                        28. நான்கு வர்ணங்கள்
                                                         
                                                                        29. வர்ணங்கள் – விளக்கம் 1

                                                                       30. வர்ணங்கள் – விளக்கம் 2

                                                                       31. வர்ணங்கள் – விளக்கம் 3

                                                                       32. வர்ணங்கள் – விளக்கம் 4

                                                                       33. வர்ணங்கள் – விளக்கம் 5

                                                                       34. வர்ணங்கள் – விளக்கம் 6

                                                                       35. வர்ணங்கள் – விளக்கம் 7

                                                                       36. வர்ணங்கள் – விளக்கம் 8
                                                  ………………………………………..        



பாகம் III ... வர்ணங்கள்



28. நான்கு வர்ணங்கள்

நான்கு வர்ணங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன், பொதுவான சில உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கீதையில் புரியாத பல விஷயங்கள் உண்டு. சரியாகப் புரிந்துகொள்ளப்படாத  விஷயங்களும் உண்டு. ஆனால் மோசமாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்கள் எவையென்று பட்டியலிட்டால், அதில் முதலிடம் பெறுவது இந்த நான்கு வர்ணங்களாகத்தான் இருக்கும்.

நான்கு வர்ணங்களைப் பற்றி மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால், அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு என்ன காரணம்?

வேதம் ஓதுபவன் பிராமணன், சண்டை போடுபவன் க்ஷத்திரியன், வியாபாரம் செய்பவன் வைஷ்யன், கூலிவேலை செய்பவன் சூத்திரன் என எண்ணினால், மருத்துவர் (Doctor), பொறியாளர் (Engineer) போன்றவர்களை எந்த வர்ணத்தில் சேர்ப்பது?

பகவான் மனிதர்களை நான்கு வர்ணங்களாக எதை வைத்துப் பிரித்தார்? “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச:” என்றல்லவா சொல்கிறார். குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரிக்கிறேன் என்று சொல்கிறார்.

இதிலும் ‘கர்ம’ என்பது செய்யும் தொழில் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒருவனது குணத்தை ஒட்டியே அவனது செயல்கள் இருக்கும் என்றாலும், பல சமயங்களில் அவனால் குணத்தை ஒட்டிய செயல்களில் ஈடுபட  வாய்ப்பு கிடைப்பதில்லை. 

ஆழ்ந்து சிந்தித்தால், இங்கு "கர்ம" என்பது வெறும் தொழிலைக் குறிப்பதல்ல; மனிதனின் மனோபாவத்தை வெளிப்படுத்தும் செயல்முறையைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.



கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அது கூறும் வர்ணங்களைப் பற்றி மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வரும் பக்கங்களில் வர்ணக்கலப்பினைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக பல கோணங்களில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை உதாரணத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அவற்றைப் பற்றி சிந்தித்து, சரியான முடிவுக்கு வரவேண்டியது தனி மனிதனின் பொறுப்பாகும். பலவிதமான  விளக்கங்கள் பல திசைகளிலிருந்தும் வரும். அனைத்தையும் உள்வாங்கி, அலசி ஆராய்ந்து, முடிவு செய்யவேண்டியது அந்தந்த மனிதனே; வேறு யாரும் இதில் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது.



29. வர்ணங்கள் – விளக்கம் 1

வர்ணங்களைப் பற்றிய பல்வேறு வகையான, விரிவான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன் ஒரு மனிதனின் வர்ணம் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

புறவுலகிலிருந்து நமக்கு வரும் தாக்கங்களின் காரணமாக நமக்குள் பதிவுகள் ஏற்படுகின்றன. பதிவுகளை ஒட்டி வரும் எண்ணங்கள்  நாம் செய்யும் காரியங்களுக்குக் காரணமாக அமைகின்றன. தொடர்ந்து நிகழும் செயல்கள், பழக்கமாகவும் அதுவே பின்னர் குணமாகவும் மாறிவிடுகிறது.

புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களின் காரணமாக ஏற்படும் பதிவுகள் நிகழும் இடம் மனமென்றால், குணங்கள் (வாசனா) பதிவாகும் இடத்தை ஆழ்மனம் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

ஒரு மனிதனின் ‘ஆழ்மனப்’ பகுதியில் பதிவாகும் குணங்களைப் பொறுத்து, அவனது மனோபாவம் (mental attitude) அமைகிறது.

ஒரு மனிதனின் மனதில் எழும் எண்ணம், வாசனா மூலமாக  வரும் எண்ணம்  இரண்டிலும் சாதாரணமாக ஒரு இணக்கம் இருக்கும். ஆனாலும் புறவுலகிலிருந்து வரும் தொடர் தாக்கங்களின் காரணமாக மனம் மூலம் ஏற்படும் பதிவுகளில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படும்.
 
எனவேதான் வர்ணத்தை மனிதனுக்குப் பொருத்தும் பொழுது, அவனது குணத்தையும், மனோபாவத்தையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
  
ரத்னாகர் என்ற அந்த மனிதனுக்கு திருடுவதுதான் தொழில். அவனது எண்ணமெல்லாம் திருடுவதில்தான் இருக்கிறது. அவனின் குணமும், மனோபாவமும் அப்படித்தானே இருக்கும். முனிவர் நாரதர் ஒரு சோதனையின் மூலம் அவனது கண்களைத் திறக்கிறார். அவனுக்கு தான் வாழ்ந்து வரும் மோசமான வாழ்க்கைமுறை புரிகிறது.

அவனது மனதிலும், சிந்தனையிலும் மாற்றம் கொண்டுவர பெரியதொரு நீண்ட தவம் வேண்டியிருந்தது. அதன் பின்னரே அவன்,  வால்மீகியாகி இராமாயணம் என்ற அற்புத  காவியத்தை இயற்றனார்.

ஒருவரின் வர்ணம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவதற்கு, அவனது குணத்திலும், மனோபாவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும்.

புதிய அனுபவங்கள், புதிய பதிவுகள், புதிய செயல்கள், புதிய பழக்கம்  என பல நிலைகள் தாண்டிய பின்னரே, குணத்திலும், அதை ஒட்டிய மனோபாவத்திலும் மாற்றங்கள் கொண்டுவர முடிகிறது.

அதற்கு எவ்வளவு முயற்சிகள் தேவைப்படுகின்றன. 

வரைபடத்தில் வாசனாவும், ஆன்மாவும் எங்கு வருகின்றன என்று பார்ப்போமா?





30. வர்ணங்கள் – விளக்கம் 2

எந்த சமயத்திலும் தர்மத்தின் (அறம்) வழியிலிருந்து நழுவாத சான்றோர் ‘சத்துவ’ குணத்தினர்.

எடுத்த காரியத்தை முனைப்புடன் செயல்படுத்தும் ஆன்றோர் ‘இரஜோ’ குணத்தினர்.

இரண்டிலும் சேராத, சுயமாக சிந்திக்கத் தெரியாதவர் ‘தமோ’ குணத்தினர்.

இந்த மூன்று குணங்களும், அவற்றிலிருந்து வெளிப்படும் மனோபாவமும் மனிதர்களின் வர்ணங்களைப் பிரித்துக் காட்டுகின்றன.

தான், தனது என்பதனை மறந்து, தர்மத்தின் வழி நடக்கும் சான்றோர், பிராமணர் என்று அழைக்கப்படுகிறார். “அறனறிந்து மூத்த அறிவுடையார்” என்று வள்ளுவர் சொல்லும் பண்புகள் நிறைந்த மனிதராக அவர் இருக்கும் பட்சத்தில், அவரை ஒரு சிறந்த ‘வழிகாட்டியாக’ எடுத்துக்கொள்ளலாம்.

சான்றோரின் வழிகாட்டுதலுடன், தர்மத்திற்கு உட்பட்டு செயலாற்றும் ஆன்றோர்,  க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மற்றும் தனது  சொந்தங்களின்  நலத்தை விட, பொது நலத்திலேயே அதிக அக்கறை உள்ளவராக இருப்பார்.

தர்மத்தின் வழியிலிருந்து விலகத் தயங்காத, சுய நலமே முக்கியம் என்ற மன நிலை கொண்டவன் யாராக இருந்தாலும், அவன் வைஷ்யன் என்று அழைக்கப்படுகிறான்.

சுயமாகச் சிந்திக்கவும், பொறுப்பேற்று செயல்படவும் பழகாதவன், மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவன் சூத்திரன் (சேவகன்) எனப்படுகிறான்.

ஒரு மனிதனிடம் மூன்று குணங்களின் தாக்கமும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியானால் அந்த மனிதனின் வர்ணத்தை எப்படி தெரிந்து கொள்வது?

சுருக்கமாக சொன்னால் –-

சத்துவ குணம் நிறைந்தவன்                      ..... பிராமணன்

சத்துவ குணத்தின் தாக்கம் கொண்டு செயல்புரிபவன்.. க்ஷத்திரியன்

சத்துவ குணத்தின் தாக்கமின்றி செயல்புரிபவன் ........... வைஷ்யன்

தமோ குணத்தின் ஆதிக்கம் மிகுந்தவன்           ..... சூத்திரன்


(இதனை ஒரு பொதுவான விளக்கமாக எடுத்துக் கொள்ளவேண்டும்)




31. வர்ணங்கள் – விளக்கம் 3


கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பாருங்கள்: –





மனம் மூலமாக ஏற்படும் பதிவுகளைப் பொறுத்தே ஒரு மனிதனுக்கு எண்ணம், செயல், பழக்கம் என்ற தொடர் சங்கிலி உருவாகி முடிவில் குணமாக மாறுகிறது. குணமும், குணத்திலிருந்து வெளிப்படும் மனோபாவமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால், மனதில் ஏற்படும் எண்ணங்களும், ஆழ்மனதில் ஏற்படும் எண்ணங்களும்  ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏனெனில் மனதில் ஏற்படும் பதிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்; ஆழ்மனதில்  ஏற்படும் பதிவுகளோ நீடித்து நிலைத்து இருக்கும்.

இவற்றிற்கிடையே முறையான இணக்கம் இல்லையென்றால், அந்த மனிதன் படும் அவஸ்தைக்கு அளவே கிடையாது. அந்த நேரம்தான் அவன் தன்னை சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரமாகும்.

அந்த முரண்பாட்டை உணர்வதே ஆன்மிக வளர்ச்சியின் தொடக்கம்.



32. வர்ணங்கள் – விளக்கம் 4

தர்ம, அர்த்த, காம” என்பது வேதம் சொல்லும் தத்துவ சுருக்கம்.  இதனை நான்கு வர்ணத்தாரும் எப்படி கையாளுவார்கள்?

ஒரு மனிதனின் பிறப்பை வைத்தும், அவன் செய்யும் தொழிலை வைத்தும் அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றால், நாம் சந்திக்கும் மனிதர்களின் வர்ணப்பிரிவினை எப்படித் தெரிந்துகொள்வது?

ஒரு மனிதன் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அவனது சிந்தனை, நடை, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டே, அவனது வர்ணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

பிராமணன் (வழிகாட்டி): - ஆரவாரத்தை விரும்பாதவன், நாணத்தோடு (humility) ஒதுங்கி வாழ்பவன், தனிமையை விரும்புகிறவன், புகழுரைக்கு மயங்காதவன், சுய-சிந்தனையில் மூழ்கி இருப்பவன், உணர்ச்சிகளை வென்றவன், அறவழியில் நடப்பவன், ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன்.

இவனுக்கு “தர்ம” மட்டுமே முக்கியம். தனது சிந்தனை, சொல், செயல்  எல்லாவற்றிற்கும்  தர்மம்  மட்டுமே  முக்கியம். பற்றற்று, விருப்பு – வெறுப்பு இன்றி,   எப்பொழுதும்   தர்மத்தைக்      கடைப்பிடிப்பவன்.

“அர்த்த, காம” பற்றிய கவலை ஏதும் கிடையாது.

க்ஷத்திரியன் (பொதுநலவாதி): - தர்மத்தின்  வழி நடப்பவன், நியாயத்திற்காக போராடுபவன், பிறர் நலம் பேணுபவன், தர்மத்தின் தாக்கம் இருப்பதால், எப்பொழுதும் உயர்வான காரணங்களுக்காக போராடுவதில் தன்னை வருத்திக் கொள்பவன், ஆங்காரத்தை கட்டுப்படுத்த முடியாதவன், எந்த வெற்றியிலும் திருப்தி அடையாதவன், உணர்ச்சி வசப்படுபவன், பெரியோரின் துணையை நாடுபவன், தன்னை மேன்மை படுத்த துடிப்பவன், தன்  பெயருக்குக் களங்கம் வரக் கூடாது என்பதில் அக்கறை செலுத்துபவன்.

இவனுக்கு  “அர்த்த, காம”  இரண்டும் வேண்டும்.  ஆனால்,  அவை  “தர்மத்திற்கு”  உட்பட்டு  இருக்கவேண்டும்.   தர்மத்தை  எதிர்த்து “அர்த்த, காம” என்றால் மனம் சஞ்சலப்படும்.

வைஷ்யன் (சுயநலவாதி): - தனது நலனிலேயே குறியாக இருப்பவன், வலியோரை புகழ்பவன், எளியோரை இகழ்பவன், உணர்ச்சி வசப்படுபவன், புலன்களை கட்டுப்படுத்த முடியாதவன்.

இவனுக்கும்  “அர்த்த, காம”  இரண்டும்  முக்கியம். ஆனால், அவற்றை அடைவதற்கு, “தர்மம்” தடையாக இருக்கிறதென்றால், அதனை ஒதிக்கித்தள்ள  தயங்கமாட்டான். ஏனெனில், இவனுக்கு சுய லாபமே முக்கியம். ஆகவே இவனது முயற்சி அனைத்தும், தனது வசதியைப் பெருக்குவதற்காகவே இருக்கும்.

சூத்திரன் (சேவகன்):- சுயமாக சிந்திக்கத் தெரியாதவன், புலன்களுக்கு அடிமையானவன், வாழ்வின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவன். சோம்பல்      மிகுந்தவன்,      அடுத்தவரின் கட்டளைக்கு  கட்டுப்பட்டு  செயல்படுபவன்.

இவனுக்கு “தர்மம், அர்த்த” இரண்டிலும் ஆர்வம் இருக்காது.



33. வர்ணங்கள் – விளக்கம் 5

ஒரு மனிதனது குணமும், மனோபாவமுமே அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்கின்றன என்றாலும், அவனது தொழில் பல நேரங்களில் அதனைப் பிரதிபலிப்பதில்லை.

அவன் அந்த பெரிய உணவகத்தில் சர்வராகப் பணியாற்றுகிறான். அங்கு உணவு அருந்த வந்த ஒரு குடும்பம். பாட்டி, மகள், மகளின் ஐந்து வயது மகன், இடுப்பில் கைக்குழந்தை மற்றும் நிறைய ‘லக்கேஜ்’கள். மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்து விடுகிறார்கள்.

அவர்கள் தங்களது சாப்பாட்டை முடித்தவுடன், அந்தக் குறிப்பிட்ட சர்வர், அவர்களுக்கு உதவியாக அவ்வளவு உடமைகளையும் சுமந்து சென்று, அவர்களை டாக்ஸியில் ஏற்றிவிட்டு வருகிறான்.   அவர்களின்  பாரத்தைக் குறைப்பதில், அவன் இன்பம் காண்கிறான். அவன் கூட வேலை செய்யும் மற்ற சிப்பந்திகள் அவனைக் கேலி செய்கிறார்கள். அவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அவனது வர்ணம் எதுவென்று சொல்வது?

தொழிலை வைத்துப் பார்த்தால் அவன் சூத்திரன்;

டாக்ஸியில் ஏற்றிவிட்டு, எதையாவது எதிர்பார்த்து, தலையைச்  சொறிந்துகொண்டு நின்றிருந்தால் அவன் வைஷ்யன்;

தனது உடல் வலியைப் பொறுத்துக்கொண்டு, பிறரது கேலியையும் பொருட்படுத்தாது பிறருக்கு உதவுவதால் அவன் க்ஷத்திரியன்.

அவனை க்ஷத்திரியன் என்றுதானே அழைக்கவேண்டும்?




34. வர்ணங்கள் – விளக்கம் 6

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான “வட்டம்” உண்டு. அவனது வாழ்க்கைச் சக்கரம் சுழலும் விதத்தைப்  பொறுத்து அது அமைகிறது. அந்த “வட்டம்”  மனிதனின் வர்ணத்தை எப்படி நிர்ணயம் செய்கிறது?

பிராமணன்: - எந்த வட்டத்திலும் சிக்காதவன்; தனக்கென்று எந்த வட்டமும்  போட்டுக் கொள்வதில்லை; தப்பித் தவறி மற்றவர்கள் அவனைச் சுற்றி வட்டம் ஏதேனும் போட்டாலும், அதனை உடைத்தெறிபவன்.

க்ஷத்திரியன்: - துவக்கம் எந்த வட்டத்தில் இருந்தாலும், காலம் செல்லச் செல்ல தனது வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பவன்.

வைஷ்யன்: - தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு, அதற்குள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்பவன்; பல நேரங்களில் தவறான வழிகளிலும் கூட செல்லத் தயங்காதவன்.

சூத்திரன் : தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொள்ளத் தெரியாதவன்; தனக்காக பிறர் அமைத்துத் தரும் வட்டத்திற்குள் இருந்து கொண்டு உழன்று வருபவன்.



35. வர்ணங்கள் – விளக்கம் 7

மனிதனின் பிறப்பிற்கும் அவனது வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் உண்டு.

மனிதனின் பிறப்பிற்கும் அவனது வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் இல்லை.

மேலே உள்ள இரண்டு கூற்றிலும் எது சரி? இரண்டுமே சரிதான், இருவேறு கோணங்களில் இருந்து பார்த்தால்.

முதலில் மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஏற்கனவே கூறியது போல் ஒரு மனிதனின் குணம், மனோபாவம் இவற்றைப் பொறுத்து, அவனது வர்ணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனோபாவம் குணத்தைப் பொறுத்தது. குணம் எதனைப் பொறுத்தது? குணத்திற்கு ஆதார சுருதியாக இருப்பது சொந்த அனுபவங்களின் காரணமாக ஏற்படும் பதிவுகள்தானே? மனம் பெறும் அனுபவங்களின் காரணமாகவே பதிவுகள் நிகழ்கின்றன. அப்படியானால் அந்த அனுபவங்கள் எந்த வயதில் ஆரம்பமாகின்றன? ஐந்து வயதுக்கும் மேலேதான் ஒரு குழந்தை தானே சுயமாக அனுபவங்களைப் பெறுகிறது. அப்படி இருக்கும்பொழுது, அவனது வர்ணத்தைப் பிறப்போடு எப்படி சம்பந்தப்படுத்த முடியும்?

இப்பொழுது மனிதனின் பிறப்பிற்கும், வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பது எப்படி என்று பார்ப்போம்.

மனிதன் இறப்பதற்கு முன், வாசனா கூட்டிற்குள் சிறைப்பட்டிருக்கும் ஆன்மா, கூட்டிலிருந்து விடுதலை அடையவில்லை என்றால், அந்த மனிதனின்  அடுத்த பிறவி தவிர்க்க முடியாததாகிறது. 

வேதாந்தப் பார்வையில், எந்த வாசனைகளுடன் மனிதன் உடலை விடுகிறானோ, அதே வாசனைகளின் தொடர்ச்சியோடு அடுத்த பிறவியும் அமைகிறது. அப்படியானால், மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு தானே!

மனிதன் தனது இளமைப் பருவத்தில், குறிப்பாக ‘டீன்-ஏஜ்’ (teenage) பருவத்தில், பலவித குழப்பங்களுக்கு ஆளாகி அல்லல்படுவதற்கான ஆணிவேர் இங்குதான் இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

தோட்டத்தில் ரோஜா மலர்ந்து மணம் பரப்புகிறது. அது மொக்காக இருந்தபோது அதனால் மணம் பரப்ப முடியவில்லை; மொட்டாக மாறியபோதும் முடியவில்லை; ஆனால் அது மலர்ந்ததும், அது நினைத்தாலும், அதனால் மணம் பரப்பாமல் இருக்க முடிவதில்லை.

ஒரு வேளை, அந்த மலர் மலரும் பொழுது, அதற்குள்ளே வேறொரு மணம் நுழைய முயற்சி செய்தால், என்ன ஆகும்?

மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள், மனிதன் பெறும் அனுபவத்தைப் பொறுத்து, மாறிக் கொண்டேயிருக்கும். எனவே அதன் காரணமாக ஏற்படும் சிந்தனைகளும் அடிக்கடி மாறும் தன்மை உடையன. ஆனால் ‘வாசனா’ பெட்டகத்தில் உள்ள பதிவுகள் நீடித்து நிற்பவை. அந்த பதிவுகள் எளிதில் மாறுவதில்லை.

சாதாரணமாக ஒரு மனிதனின் மனதில்  எழும் எண்ணங்களுக்கும், குணம் மற்றும் மனோபாவம் காரணமாக வரும் சிந்தனைகளுக்கும் இடையே இயல்பாக ஒரு இணக்கம் இருக்கவேண்டும்.

ஆனால் “டீன்-ஏஜ்” பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பருவத்தில், மாறுபாடு -– இப்பிறவியில் புதிதாகப் பதிவாக வேண்டிய குணத்திற்கும், முன் பிறவியில் ஏற்கனவே பதிவாகியிருந்த குணத்திற்கும் இடையேயுள்ள மாறுபாடு – ‘வாசனா’ பெட்டகத்தில் அதாவது ஒரே இடத்திலேயே வருகிறது. அந்த நேரத்தில் எழும் பிரச்சனைகள் மிகவும் ஆழமானவை.

நல்லதொரு வழிகாட்டுதல் இல்லையென்றால், அந்த இளமைப் பருவம் எவ்வளவு சிதலமடைந்து விடுகிறது.



36. வர்ணங்கள் – விளக்கம் 8                    

வர்ணக் கலப்பின் தன்மைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், பிராமண, சூத்திர வர்ணங்களைச் சேர்ந்தவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் க்ஷத்திரிய, வைஷ்ய வர்ணங்களைச் சேர்ந்தவர்களை மற்றவர்களால் மட்டுமல்ல, அவர்களாலேயே கூட புரிந்து கொள்வது கடினமான ஒன்று.

இருந்தாலும் இருவருக்குமிடையே  உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனம் பிரித்துப் பார்ப்போமா?

இரஜோ குணம்:     இருவருக்கும் பொதுவானது.

தர்மம்:              இருவருக்கும் அதன் அர்த்தம் தெரியும்; இருந்தாலும் எப்பொழுதும் தர்மத்தின் வழி நடக்க விரும்புவன் க்ஷத்திரியன் மட்டுமே.

அர்த்த, காம:        இருவருக்கும் நாட்டமுண்டு; இருப்பினும், அவற்றை  அடைவதற்கு தர்மம் தடையாக இருந்தால், அதனை  விலக்கிவிட வைஷ்யன் தயங்கமாட்டான்.

பெரியோர் துணை:  க்ஷத்திரியன் சான்றோரின் துணையை நாடி நிற்பவன்.

போராடும் குணம்:   இருவருக்கும் பொதுவானது;  ஆனாலும் தோல்வி    வரும் எனத் தெரிந்தால்,  வைஷ்யன் போராட்டத்தில்  இருந்து ஒதுங்கிவிடுவான்.     
             
மானம் காத்தல்:   க்ஷத்திரியன் இதில் கவரிமானைப் போன்றவன்.  எதை     இழந்தாலும், மானத்தை இழக்க விரும்ப மாட்டான்.

அதனால்தான் க்ஷத்திரியனுக்கும் வைஷ்யனுக்கும் இடையேயான மிகப் பெரிய வேறுபாடு திறமையில் அல்ல; தர்மத்தின் மீது கொண்டுள்ள பற்றில்தான் இருக்கிறது.

மழலையின் கீதை .. பாகம் 2

மழலையின் கீதை  ..  பாகம் 2


பாகம் II   …   குணங்கள்


 பொருளடக்கம்  
                         
                                                 22. மூன்று குணங்கள்

                                           23. குணங்கள் – விளக்கம் 1

   24. குணங்கள் – விளக்கம் 2

                                           25. குணங்கள் – விளக்கம் 3                    

    26. குணங்கள் – விளக்கம் 4

                                           27. புறச்செயலும், அகச்செயலும்
                                         …………………………………………………….          


22. மூன்று குணங்கள்

மனிதன் தொடர்ந்து ஒரு பொருளைப் பற்றி நினைக்கும் பொழுது, அவனுக்கு அதன்மேல் பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையை வளர்க்கிறது. 

ஆசையை நிறைவேற்ற அவன் செயல்படுகிறான். தொடர்ந்து செய்யும் செயல்கள் பழக்கமாக மாறி, இறுதியில் அவனது குணத்தை நிர்ணயிக்கின்றன.





மனிதனின் குணங்கள் மூன்று வகைப்படும். அவை சத்துவ குணம், இரஜோ குணம் மற்றும் தமோ குணம்.

இம் மூன்று குணங்களையும் ஓரளவு சரியாகப் புரிந்து கொள்ள உதவியாக சில விளக்கங்கள். அவற்றில் சில பாமரத்தனமாக இருந்தாலும்,  குணங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ள அவை உதவலாம்.


23. குணங்கள் – விளக்கம் 1

எல்லாம் தெரிந்திருந்தாலும் எதுவுமே தெரியாதவர்போல் இருப்பது, பணிவு (humility), ஆடம்பரத்தை விரும்பாதது, தனித்து இருக்க விரும்புவது, புகழை வெறுப்பது, அகத்தாய்வில் அதிக ஈடுபாடு கொள்வது முதலானவை ‘சத்துவ’ குணத்தின் அடையாளம்.

எதையும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம், தன்னால்தான் முடியும் என்ற தன்முனைப்பு, தான் செய்யும் காரியங்களை எண்ணி பூரிப்பு, ஆரவாரத்தில் ஆர்வம், புகழில் ஆசை, மற்றவரை அடக்கி ஆள நினைப்பது முதலானவை ‘இரஜோ’ குணத்தின் அடையாளம்.

சுயமாக சிந்தித்து செயல்பட தெரியாதது, மிகுதியான சோம்பல், பிறரின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு  அடங்கி வாழ்வது முதலானவை ‘தமோ’ குணத்தின் அடையாளம்.

இத்தகைய குணங்கள் உடையவர்களை  முறையே சான்றோர், ஆன்றோர், மற்றவர் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.
      
                                                                                                                 
24. குணங்கள் – விளக்கம் 2

அந்தக் குடும்பத்தில் வயதான பெரியவர் (வயது 70), குடும்பத்தின் தலைவர் அவர். பெரியவரின் மகன் (வயது 40), பெரியவரின் பேரன் (வயது 5). அன்றாட வாழ்க்கையில் இவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கற்பனை.

பெரியவர் வாழ்க்கையில் நிறையப் போராடி, மிகுந்த அனுபவங்களைப் பெற்று, பொறுப்புகளிலிருந்து விலகி, விவேகமாக, விருப்பு வெறுப்பின்றி, தெளிவாக   சிந்திக்கத் தெரிந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் மகன் சந்திக்கும் போராட்டங்களைப் பார்க்கிறார்; ஆனாலும் எதிலும் தலையிடுவதில்லை. தன்னால் சமாளிக்க முடியாமல், மகன் தன்னை நாடிவரும் பொழுது, அவன் கடைப்பிடிக்க வேண்டிய   வழியை காட்டி உதவுகிறார். மற்றபடி அவரது அன்றாட வாழ்க்கையில் எந்தவித சலனமும் இருப்பதில்லை.

அது ‘சத்துவ குணம்’; கொதித்து அடங்கிய பாலைப் போன்றது.


மகனுக்கோ வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நிலை. இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி என மாறி, மாறி ஏற்படும் நிகழ்வுகளால், ஆனந்தப் பட்டு, அல்லல்பட்டு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

அது ‘இரஜோ குணம்’; கொதித்துக்கொண்டிருக்கும் பாலைப் போன்றது.


பேரனுக்கோ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எதுவும் தெரியாது. விபரம் புரியாமலே அவனுக்கு சிரிப்பும் வரும், அழுகையும் வரும்.

அது ‘தமோ குணம்’; கொதிக்க வைக்கப்படாத பாலைப் போன்றது.



25. குணங்கள் – விளக்கம் 3


அந்தப் புலையனுக்கு! சின்ன சந்தேகம் - -      

   “ஏன் சாமி, நான் தொட்டது உங்களையா அல்லது உங்க   உடம்பையா?”

கேட்ட ஞானிக்கோ, புதிதாக ஒரு ஞானம் பிறக்கிறது.

கடவுளைக் காண வேண்டுமா, ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறார் இரமண மகரிஷி. ஒரு சிலரே விடை காண முயற்சி செய்கிறார்கள். அவர்களாலும் விடை காண முடியாமல் தடுப்பது எது?

அந்த “நானை” இந்த ‘நானால்’ ஏன் அறிய முடியவில்லை? இந்த ‘நான்’ என்ற அகந்தை, அந்த “நானை” மறந்து விட்டதுதான் காரணம்.

   “அகந்தை அழியும் இடம், ஆண்டவனை அறியும் இடம்”

புரியத் தெரிந்தவனுக்கும், அறியத் தெரியவில்லை! ஏன்?

பெருங்காய டப்பாவில் உள்ள அனைத்து காயத்தையும் எடுத்துவிட்டாலும் கூட, டப்பாவில் உள்ள வாசனை எளிதில் போகாது என்கிறார் பரமஹம்சர். 

அகந்தையும் காயத்தைப் போன்றதுதானோ?


   அடங்கி இருப்பது  சத்துவ குணம்;

   ஆடித் திளைப்பது இரஜோ குணம்;

   உறங்கிக் கிடப்பது  தமோ குணம்.



26. குணங்கள் – விளக்கம் 4

சான்றோர், ஆன்றோர் இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம்?

சான்றோர் அகத்தாய்வில் அதிகம் ஈடுபடுவதால் புறவுலக வாழ்க்கையில் ஈடுபாடு காட்டுவதில்லை. அதையும் மீறி தவிர்க்க முடியாமல் புறவுலகில் செயல்பட நேரிட்டால், இருள் சேர்க்கும் இருவினைகளிலும் பற்றின்றி செயல்படுவார்கள். எடுத்த பதவியை அலங்கரிக்கும் அவர்கள், பதவியின் காரணமாக தம்மை அலங்கரிப்பதில்லை.

ஆன்றோர் பதவியை மட்டுமல்ல, பதவியின் பெயரால் தன்னையும் அலங்கரிக்க விரும்புவர்; ஒவ்வொரு நிலையிலும் தன்னை வெளிப்படுத்தத்  துடிப்பவர்.

அதனால்தான், ஆன்றோரைவிட சான்றோர் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். திருவள்ளுவரின் குறள்கள் சான்றோரைப் பெருமைப்படுத்தி சொல்வதை பல இடங்களில் காணலாம்.

சத்துவ குணம்  – எல்லாம் தெரிந்திருந்தும் புறவுலகச்
                 செயல்களில் ஆர்வம் இல்லாதிருத்தல்.

இரஜோகுணம்– புறவுலகில் தன்முனைப்புடன் செயல்படுவது.          

தமோகுணம் -  புறவுலகில் சுயமாக செயல்படத் தெரியாதது.



27. புறச்செயலும், அகச்செயலும்

ஈசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட அந்த அரசனுக்கு ஆசை. அதை செயலிலும் காட்டினான். கூடவே மனதிற்குள் ஓர் கர்வம், தன்னால்தான் கட்ட முடிகிறது என்று.

அதே ஈசனுக்காக ஆண்டியும் ஒரு கோவில் கட்டினான்; யாரும் அறியாமல், மனதிற்குள்ளாகவே.

இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க, இறைவனோ பூசலார் நாயனார் என்ற அந்த ஆண்டிக்கே முன்னுரிமை தருகிறார்.

உடலை  விற்றுப் பிழைக்கும் பெண் அவள்; இருந்தாலும் தன்  செயலுக்கு வருந்தி இறைவனை நோக்கி மனம் நோக அழுது புலம்புகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் துறவியோ, தனது மதச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாலும், எதிர்வீட்டுப் பெண்ணின் தொழிலைத் தொடர்ந்து கவனித்து    வருகிறார்; அத்துடன் அவளிடம் அவள் எவ்வளவு பாபங்கள் செய்கிறாள் என்று எடுத்துச் சொல்லி, நல்லபடி நடக்க அறிவுரையும் வழங்குகிறார். இருவரும் ஒரே நேரத்தில் இறக்க, பெண் சொர்க்கத்திற்கும், துறவி நரகத்திற்கும் செல்ல நேரிடுகிறது. பரமஹம்சரின் உபமான கதையிது.

இதற்கான காரணங்கள் யாவை?

தொடர்ந்து செய்யப்படும் செயல்கள், பழக்கமாக, பின்னர் குணமாக மாறுகிறது. இருந்தாலும் புறச்செயல்கள் நிகழும் முன்பாகவே, அகத்தளவில் அதிகமாக அவை நடந்தேறிவிடுகின்றன.

ஆகவே, மனிதனின் குணத்தை நிர்ணயிப்பது அவனுடைய புறச்செயல்கள் அல்ல; அகத்தளத்தில் தொடர்ந்து நிகழும் அகச்செயல்களே.


Monday, 19 February 2018

சிந்தனையில் சில விதைகள்



"மனிதன் என்பவன்!?"


மனிதன் எதை நினைக்கிறானோ, அதாகவே மாறுகிறான்.

மனத்தின் உள்ளே உள்ள பதிவுகளின்படியே அவன் நினைக்கிறான்.

தனக்கு வெளியே உள்ளவற்றோடு தொடர்புகொள்ளும்பொழுது, அதனால் ஏற்படும் அனுபவங்கள் காரணமாக அவனுள் பதிவுகள் நிகழ்கின்றன.

ஆக, புறவுலகில் உள்ள பொருட்கள், அவற்றோடு நாம் தொடர்புகொள்ளும் விதம் இவற்றைப் பொறுத்து, மனிதனின் வாழ்க்கை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ மாறுகிறது.

சிந்தியுங்கள்.

.............................................

அறிவை அறிந்தபின்   
     அலைவதும் இல்லை

அறிவை அறிந்தபின்
     அயர்வதும் இல்லை 

அறிவை அறிந்தபின்
     அழுவதும் இல்லை

அறிவை அறிந்தபின்
     செழுமதி தானே
...................................................

 அறியா அறிவினை
     அறிந்தவர் அறியார்

அறியா அறிவினை
     அறிந்தவர் அறிந்தால்

அறவழி நடக்கும்
     அந்தணர் தாமே
..................................................
அவத்தை விடு, தவத்தை எடு
……………………………………….............
அகமே புறமானால், “அவனே” அகமாகும்
...................................................
அடைந்தால், இழந்து விடுவோம்

இழந்தால், அடைந்து விடுவோம்
...................................................
அறிந்திடல் அறிந்திட,
அறியாமை அழிந்திடும்;

அறியாமை அழிந்திட,
அறிந்திடல் அறிந்திடும்(?)
...................................................
அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;
அஹங்காரம் இருந்தால், மலர முடியாது.
...................................................
அது ஒரு அகன்ற, பெரிய பாத்திரம். அதில் உள்ள தண்ணீர் குடிக்க முடியாத அளவிற்கு உப்பாக இருக்கிறது.

பாத்திரத்தில் விழும்படியாக நல்ல தண்ணீர் குழாயைத் திறந்துவிட்டால், அதில் உள்ள உப்பு கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறிவிடுகிறது.

மனிதனும் ஒரு பாத்திரம்தான். அவனது ஆழ்மனதில் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் சேர்ந்தே இருக்கின்றன. ஆனால், அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நல்ல குணங்களை வளர்க்கும் பதிவுகளை மனதில் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், நாளடைவில் மனதில் உள்ள தேவையில்லாத பதிவுகள் வெளியேறிவிடும்.
..................................................
அடர்கொண்ட காட்டுக்குள்
அழுது புலம்பாமல்

சுடர்கொண்ட வீட்டுக்குள்
சுகம்காண்ப தெக்காலம்?
...............................................
அண்டத்தில் பிண்டத்தை
அணைத்திருந்த நிலைமாறி

பிண்டத்தில் அண்டத்தை
பிணைத்திருப்ப தெக்காலம்?
...................................................
அகந்தை அழியும் இடம்; ஆண்டவனை அறியும் இடம்.
..................................................
அறிவது அறிந்தார்
அறிந்திடா ஒன்றை

அறிவது அறியார்
அறிந்திருப்ப தெக்காலம்?
..................................................
அறிந்தோ, அறியாமலோ நாம் எப்பொழுதும் ஒரே சமயத்தில் இரண்டு காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

நாம் ஏற்கனவே விதைத்த விதைப்பின் பயனை, இப்பொழுது அறுவடை செய்கிறோம். எதிர்கால அறுவடைக்காக இப்பொழு
து விதைக்கவும் செய்கிறோம்.

அறுவடை நாம் ஆசைப்பட்ட மாதிரி இல்லையென்றால் புலம்பும் நாம், எதிர்கால அறுவடைக்காக இப்பொழுது விதைக்கும் விதைப்பைப் பற்றிக் கவலைப்படுகிறோமா?
................................................
அகந்தை குறைந்தால்
அன்பு மலரும்;
அகந்தை கூடினால் ஆசை வளரும்.
......................................
அத்தன் இருப்பிடத்தை
ஆராய்ந்து பார்த்துநிதம்

சித்தம் தெளிவிக்கும்
சீர்பெறுவ தெக்காலம்?
...............................................

அன்பு .. அனைவர்க்கும் பொதுவான ஒன்று.

மனிதன் ஆசை வசப்பட்டால் 
அது காமமாக, பாசமாக மற்றும் பேராசையாக உருவெடுக்கிறது.

மனிதன் தேவைக்கு மட்டும் வாழும்போது, அது மனிதனின் உள்ளத்தில் கருணையாக ஊற்றெடுக்க ஆரம்பிக்கிறது.
........................................

அண்டத்து நாயகன்
பிண்டத்துள் இருக்கின்றான்

உள்ளிருக்கும் நாயகனை
உருக்கொள்ளத் தெரியாமல்
ஊரெல்லாம் சுற்றுகின்ற
உறவுகளைப் பாரேண்டி!?
............................................
அறிவியலும், ஆன்மிகமும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்கிறார்கள். அப்படியானால், ஆன்மிகத்தில் அறிவியல் கிடையாதா?

அறிவியலும், ஆன்மிகமும் என்பதற்குப் பதிலாக அரசியலும், ஆன்மிகமும் என்பதே சரியாக இருக்கும்.

அரசியல் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுகிறது என்றால், ஆன்மிகம் வாழ்க்கை நெறியை வளர்க்க உதவுகிறது.

அரசியலும், ஆன்மிகமும் இணை கோடுகளாக, ஆனால் இணையக்கூடாத கோடுகளாக இருக்கவேண்டும்.
...................................................
ஆன்மிக வாழ்க்கைக்கு அடிப்படையாக வேண்டுவது, வாழ்வில் வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம். அதற்கு அடையாளம் பரிதவிப்பு இல்லாத அமைதி.
..................................................
“ஆறுவது சினம்” என்று மூதாட்டி சொல்லியிருக்கிறார். 

“ஆறுவது சினம்” என்று சொன்னவர், “ஆற்றுவது சினம்” என்று ஏன் சொல்லவில்லை?

காப்பி சூடாக இருந்தால், நாம் அதனை ஆற்றியும் குடிக்கலாம்; அதுவாக ஆறிய பின்னும் குடிக்கலாம்.

ஆனால், “சினம்” அப்படிப்பட்டதல்ல. அதுவாகத்தான் ஆற வேண்டும்; நாம் நேரடியாக அதனை ஆற்ற (அடக்க) முயற்சிக்க கூடாது. அது ஆபத்தானதும்கூட.

‘சினம்’ அதுவாக ஆற என்ன செய்ய வேண்டும்?

வெளியில் செல்லும் மனதை நிறுத்திப்பிடித்து அகத்தாய்வில் ஈடுபடுத்தினால், சினம் ஆறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்கலாம்.
...................................................
ஆடுகின்ற பட்டமொன்று
ஆடாமல் அறுந்துவிழும்

ஓடுகின்ற தேர்க்காலும்
ஓடாமல் ஒடிந்துவிழும்

கடலோடும் நாவாயும்
கரையறியா மூழ்கிவிடும்

படர்ந்தோங்கும் பெருமரமும்
தடம்புரண்டு தரைவீழும்

வல்லான் வகுத்தவையும்
வகுத்தவைகள் வகுத்தவையும்

வையகத்தில் ஓர்நாளில்
வாழ்வுதனை முடித்துவிடும்

ஆண்டவன் படைப்பினிலே
அனைத்திற்கும் ஒர்மரணம்

ஆசைகொண்ட மனிதனுக்கோ
அன்றாடம் மரணம்தான்

அளவிறந்த ஆசைகளே
அவதிகளின் களமாகும் 

அணையொன்று கட்டிவைத்தால்
அன்பில்உளம் வளமாகும் 
..................................................
ஆடும் பணியென்று
அலைந்து திரிந்தாலும்

பாடும் பணியொன்றில்
பயணிப்ப தெக்காலம்?
...............................................
ஆசை கொண்ட மனிதனுக்கு, அன்பின் அர்த்தம் புரியாது.
.................................................

ஆடுகின்ற நாயகன்
அரங்கத்தில் இருக்கின்றான்

அரங்கமும் தெரியாமல்
ஆட்டமும் காணாமல்
அங்குமிங்கும் அலைகின்ற
அலங்கோலம் அறிந்திலையோ?
........................................
இல்லாத வறியோர்க்கு இல்லாது என்றிட்டால் இல்லை எனவொன்று இல்லை.
...................................................
“இருக்கின்ற வரையிலும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும்” என்று சொல்வதுண்டு. ஆனால், அவர்கள் சொல்லவந்தது “வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கவேண்டும்” என்பதைத்தான்.
எவனொருவன் இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி போன்ற எல்லா இருமைகளையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறானோ. அவன் மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறவன்.
..................................................
இனியதென்று இனியதென்று
என்றும் பாடு
எனது தேசம் இனியதென்று
என்றும் பாடு

சாதிமத பேதமென்றும்
சண்டைதனை மூட்டுவிக்கும்
சாதிமத பேதம்விட்டு
தேசம் மட்டும்
நினைவில் கொண்டு (இனியதென்று)

இனவெறியும் மொழிவெறியும்
இழிநிலையைத் தோற்றுவிக்கும்
இனவெறியும் மொழிவெறியும்
இனி மறந்து ஒன்றுபட்டு (இனியதென்று)

மணலையொத்த 
மக்கள் கூட்டம்
மனம் குமுறும் வாழ்வு தரும்
மக்களுக்கோர் அணையெடுத்து
மகிழ்ச்சி வெள்ளம்
பொங்கக் கண்டு  (இனியதென்று)
...................................................
'இது’ வெளியேறும் பொழுது, ‘அது’ வெளிப்படுகிறது.
...................................................
உள்ளம் தெளிவாகி
உணர்ச்சியெல்லாம் ஒளியாகி

கள்ளமிலாப் பெருவாழ்வில்
கனிந்திருப்ப தெக்காலம்?
.................................................
உச்சிக்கு கீழமர்ந்து
உறங்காமல் இருக்கின்றான்.

மச்சுவீடு பாதை செல்ல
குச்சியொன்று கையிலுண்டு
மச்சுவீடும் குச்சியும்
மறந்து போன பாவியடி?
..................................................
உடல் - -
அதிகமான பாரத்தை தாங்காது; கீழே இறக்கி வைத்துவிடும்.

மனம் - -
எவ்வளவு பாரத்தை ஏற்றினாலும் மறுக்காது; ஆனால், பாரத்தின் அளவு கூடினால் அது நம்மை பயித்தியமாக்கி விடும்.
............................................
ஊரெல்லாம் ஓடி
உலகெல்லாம் வலம்வந்து

பாடெல்லாம் பாடி
பரிதவிக்கும் மடநெஞ்சே

ஏடெல்லாம் தேடி
எங்கெங்கோ சென்றாயே

கூடெல்லாம் குடியிருக்கும்
கொற்றவனைக் காணலியோ?
...................................................
ஊருக்கெல்லாம் காதலன்
உள்ளொளியாய் இருக்கின்றான்.


கவனத்தில் ஒருமைகண்டால்
காதலனைக் கண்டிடலாம்
கவனமட்டும் புவனத்தில்
கலந்திருப்ப தேனடியோ?
................................
என்னுள் "அவன்" இருக்க
"அவனுள்" நான் இருக்க
எதுவுமே தெரியாமல்
எங்கெங்கோ அலைகின்றேன்.
...........................................
எண்ணி, எண்ணி எண்ணமற
...................................................
எந்த அறிவு ஞானத்தில் முடிகிறதோ, அந்த அறிவே உண்மையான அறிவு.
.................................................
என்னைப்பற்றி - -
ஊருக்குத் தெரியாதது, என் உறவுக்குத் தெரியும்;
     
உறவுக்குத் தெரியாதது, என் மனைவிக்குத் தெரியும்;

மனைவிக்குத் தெரியாதது, எனக்குத் தெரியும்;

எனக்கும் தெரியாதது, எனக்குத் தெரியும்!?!***

***வாழ்க்கையின் விசித்திரம் இதில்தான் உள்ளது.

ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது;
அதற்கு உள்ளே, அதனையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கிறது   
என்பதுவும் தெரியாது. 

மொத்தத்தில், ‘நாம் யார்’ என்று தெரியாமலேயே வாழ்க்கையை முடித்து
விடுகிறோம்.
...................................................
எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லை என்றால், ஆன்மா அறியப்படவில்லை எனலாம்; 
எதுவுமே இல்லையென்றாலும் எல்லாமும் இருக்கிறது என்றால், ஆன்மா அறியபட்டுவிட்டது என்று பொருள்.
...................................................
என்னுடையது என்று 'எதுவுமில்லை' என்று உணரும்பொழுது மனிதன் "விழிப்புணர்வு" பெறுகிறானே அல்லாது, அவன் விழிப்புணர்வு பெறுவதற்கு உதவக்கூடியது வேறு 'எதுவுமில்லை'.
.........................................🥰.......
ஏதுக்கு வாழ்வு
என்றெண்ணிப் பாராமல்

சூதுக்குள் வாழ்ந்தும்
சுகமொன்றும் காணாமல்

வாதுக்கு வந்தும்
வழியொன்றும் தேடாமல்

சாவுக்கு வந்து
சவமானார் சஞ்சலத்தில்
...................................................
ஏகன் அநேகன்; அனைத்திலும் ஏகன்.
...................................................
ஒதுங்காமல், ஒடுங்க முடியாது;

ஒடுங்காமல், அறிய முடியாது;

அறியாமல், தெளிய முடியாது;

தெளியாமல், உணர முடியாது;

உணராமல், மலர முடியாது.
...........................................
ஒரு மனிதன் தான் செய்யும் தவறுகளிலிருந்து மட்டுமல்ல, மற்றவர்கள் நமக்கு செய்யும் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
..........................................
ஒரு மனிதன் செய்யும் தவறு அவனது குடும்பத்தை பாதிக்கும் என்றால், அது கண்டிக்கப்பட வேண்டும்.

அந்த மனிதன் செய்யும் தவறு ஒரு குழுவையோ, ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு இனத்தையோ பாதிக்கும் என்றால், அதை கண்டிப்பதோடு நின்று விடாமல், அந்த மனிதனுக்கு அதற்கான தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.

அத்தகைய தவறு நாட்டின் இறையாண்மையை பாதிப்படைய செய்யும் என்றால், அதற்கு தண்டனை மட்டும் போதுமா? அத்தகைய மனிதர்களை என்ன செய்வது? 'களைந்தெறிய வேண்டும்' என்கிறார் வள்ளுவர்.

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" என்கிறார் வள்ளுவர்.
..............................................
கதைபல கேட்டோம்
     கருத்தினை அறிந்தோம்
கடவுளை அடையும்
     வழியெதைக் கண்டோம்?
...............................................
கள்ளப்புனல் கொண்டு
கதறித் திரியாமல்

உள்ளப்புனல் கண்டு
ஊர்ந்துசெல்வ தெக்காலம்?
...................................................
கடவுளுக்கும், இறைவனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதன் இல்லையென்றால், கடவுளும் இருக்கமாட்டார்;
மனிதன் இல்லாதபோதும், இறைவன் இருப்பார்!
ஏனெனில், கடவுள் ‘உருவம்’; இறைவன் ‘அருவம்’.
.................................................
கிடைத்தன கண்டு, களித்தது அன்று;
கிடந்தது கண்டு, களித்தது இன்று.
………………………………………….....
சரணடைவது என்றால் என்ன? 

நமக்கு எது நேர்ந்தாலும் அதை "ஈஸ்வரனின் பிரசாதமாக" ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மையாகவே சரணடைந்து விட்டால், "எல்லாம் அவன் செயல்" என்று ஒப்புக் கொள்வதாக அர்த்தம்.

"அவன் செயல்" என்று முடிவான பின், அழுவது சரியா?

சரணாகதி அடைந்து விட்டால், கடவுளிடம் நமது வேண்டுதல் எப்படி இருக்க வேண்டும்? 

"இறைவா! நீ எது கொடுத்தாலும், நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை தாங்கமுடியாத வேதனையை நீ தருவாயானால், அதைத் தாங்கும் வல்லமையைக் கொடு." இதுதான் உங்கள் வேண்டுதலாக இருக்க வேண்டும்.
.......................................
சட்டம், நியாயம், தர்மம் இவற்றிற்கிடையே என்ன வித்தியாசம்?

ஒரு கல்லூரி ஆசிரியர் தனியாக மாணவர் பயிற்சிப் பள்ளி நடத்துகிறார். அவர் ஆசிரியராக வேலை பார்ப்பதால், அதனை தன் மனைவியின் பெயரில் நடுத்துகிறார்.

சட்டப்படி அந்தப்பள்ளி அவரது மனைவியின் பெயரில் நடப்பதால், அவர் குற்றவாளி அல்ல.

உண்மையில் அந்தப்பள்ளியை அவர்தான் நடத்துகிறார். ஆதலால் நியாயப்படி அவர் குற்றவாளி ஆகிறார்.

ஆனால், அந்த பயிற்சியை நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் தனது கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக செலவிட்டு வருகிறார். எனவே தர்மப்படி பார்த்தால், அவர் குற்றவாளி அல்ல.
……………………………………………………
சாதனை செய்வதைக் காட்டிலும் சிறப்பானது, செய்த சாதனையை மறந்து விடுவதுதான்.
...................................................
சித்தத்தில் உள்ள எண்ணங்கள், வானத்தில் உள்ள மேகங்கள் போன்றவை; ஆற்றில் ஓடும் நீரைப் போன்றதல்ல.
அவை மிதந்து செல்பவை; உரசிச் செல்பவை அல்ல.
...................................................
சிதறிய மேகம் சேர்ந்து திரண்டால்
மழையெனப் பெய்யாதோ?

ஒருதுளி எல்லாம் ஒன்றாய் சேர்ந்தால்    
ஓடையும் ஆகாதோ?

ஓரிரண்டாக ஓடைகள் சேர்ந்தால்
நதியெனப் பாயாதோ?

உதிரிப் பூக்கள் ஒன்றாய் கோர்த்தால்
மாலையும் ஆகாதோ?

ஆன்றோர் சான்றோர் ஓரணி சேர்ந்தால்
மானிடம் வளராதோ?
................................................
சிரி -- சந்தோஷப்படாதே; அழு -- அவதிப்படாதே.
.................................................
சிற்றினம் சேர்ந்து
சிறுமையுடன் வாழாமல்

மற்றினம் தேர்ந்து
மனமகிழ்வ தெக்காலம்?
..........................................
சில மனிதர்களை "energy-suckers" என அடையாளம் கண்டுகொள்ள முடியும். 

அவர்களுடன் சில மணித்துளிகள் பேசினால் கூட, உங்களது சக்தி விரயமாவதை உணர முடியும்.

அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தால், நமக்குள் 'negative mentality' உருவெடுப்பதைக் காண முடியும்.

அப்படிப்பட்ட மனிதர்களை விட்டு விலகி இருப்பது நமக்கு நல்லது.
.................................... 
சுற்றம் மறந்தால், சுற்றம் துறக்கும்.
...................................................
சூரியத் தகடுகளை (solar panel) உபயோகித்து நிறைய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து வருகிறார்கள். அதற்காக ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப் படுத்துகிறார்கள்.

அதற்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலைகளின் மேலாக, ரயில் வழித் தடங்களில் மேலாக சூரியத் தகடுகளை அமைத்து மின் உற்பத்தி செய்தால் என்ன?

பராமரிப்பு பணியில் தொழிலாளிகள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், பேருந்து மற்றும் ரயிலின் வழித்தடங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

தவிர, பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும் வெயிலின் தாக்கம் தெரியாது.
...................................................
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாறுவது ‘சட்டம்’;
எந்த சூழ்நிலையிலும் மாறாதது ‘தர்மம்’.
................................................
தன்னை அறிவாளி என்று நினைப்பவன் – முட்டாள்;
தன்னை முட்டாள் என்று உணர்ந்தவன் – அறிவாளி.
...................................................
தன்னலம் பெருக்கும் தற்குறி மனிதர்
சுயநலம் ஒன்றே
குறியெனக் கொள்வார்

சுயநலம் ஒன்றே
குறியெனக் கொண்டார்
பிறர்நலம் பேணும்
பேற்றினை அறியார்

பொன்னும் மணியும் பூண்டு மகிழ்ந்து
தன்னலம் பெருக்கும் தற்குறி மனிதர்
கொண்டது போதும் குறிப்பினை மறந்து 
குலமணி உன்னை கூவித் திரிவார்

உன்னிடம் தேடி
ஊர்வலம் வருவோர் உள்ளம் தன்னில்
ஒளியினைப் பாய்ச்சி
தன்னலம் பெருக்கும் தற்குறி மறக்க
தயை புரிவாயோ
தனிப்பெரும் கண்ணா?
....................................................
தற்பொழுது ஆன்மிக அரசியல் என்றொரு சொற்றொடர் நாட்டில் புழங்கி வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவாக இருக்கமுடியும்?

ஆன்மிக அரசியலில் பிராமணன் (வழிகாட்டி), க்ஷத்திரியன் (பொதுநலவாதி) மற்றும் சூத்திரன் (சேவகன்) மூவரின் பங்கும் அவசியம் இருக்க வேண்டும். 

எந்த காரணத்தைக் கொண்டும் ஒரு வைஷ்யனுக்கு (சுயநலவாதி) அதில் எந்தவித பங்கும் இருக்கக் கூடாது. அவன் அரசியலுக்கு வெளியில் இருந்து தனது ஆதரவை மட்டும் தரவேண்டும். 

அவன் அரசியலில் நுழைந்தால், அந்த நாட்டின் முன்னேற்றம் பாழாகிவிடும்.
………………………………………........

தன்னை நம்பி தன் பிள்ளைகள் இல்லை எனத் தெரிந்ததும், ஒதுங்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதன்பின் இருக்க வேண்டியது "பற்றற்ற பற்று" (detached attachment) மட்டுமே.
..................................
தன்னில் தானறியா, தனியாக இருந்தானாம்;
தன்னில் தானறிய, தான் மட்டும் இருந்தானாம்.
...................................................
தான் அழிந்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிந்தும், மெழுகுவர்த்தி வெளிச்சம் தர மறுப்பதில்லை; அகல்விளக்கு தன்னை அழிக்காமல் வெளிச்சம் தர ஒத்துழைக்கிறது.

நாம் மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு அகல்விளக்காக இருக்கலாம் அல்லவா?
...................................................
தான் கடைப்பிடிக்கின்ற சுய தர்மம், பொதுவான தர்மத்தோடு ஒத்துப்போனால் மட்டுமே, அவன் பிராமணன் என்று அழைக்கத்தக்கவன்.
……………………...............................
திருவைத் தேடி
திருமறந்து போகாமல்

திருவைத் தேடி
திருமறப்ப தெக்காலம்?
.................................... ..............
தேவைக்கு ஆசைப்படு; ஆசைக்கு ஆசைப்படாதே
...................................................
பற்று அற, அற பற்று
…………………………………………..........
பக்தி உண்மையானது என்றால், அது பாசவலையை அறுக்கவேண்டும்.
......................................................
பண வெறியும், அற நெறியும்
ஒரே இடத்தில் இருக்க முடியுமா?
...................................................
பார்க்குமிட மெல்லாம்
பரமாத்மா என்றார்கள்

நீக்கமற உலகெங்கும்
நிறைந்திருக்கும் தூயவனை
நோக்குமிடம் தெரியாமல்
ஏங்கித் தவிப்பதுஏன்?
....................................................
பிறந்தன இறக்கும்
     இறந்தன பிறக்கும்

காய்த்தன பழுக்கும்
     பழுத்தன காய்க்கும்

நினைத்தன மறக்கும்
     மறந்தன நினைக்கும்

சிரித்தன கதறும்
     கதறின சிரிக்கும்

சுவைத்தன வெறுக்கும்
     வெறுத்தன சுவைக்கும்

கொடுத்தன இரக்கும்
     இரந்தன கொடுக்கும்                                   
பற்றின விலகும்
     விலகின பற்றும்

வென்றன தோற்கும்
     தோற்றன வெல்லும்

உழைத்தன ஒதுங்கும் 
     ஒதிங்கின உழைக்கும்

ஓடின ஓடியும்
     ஒடிந்தன ஓடும்

இருவேறு உலகம்
     இயல்பென அறிந்தார்
இறைவன் ஒருவர்
     என்பதும் அறிவார்.
______________________
பிறருக்கு அடிமையாக இருப்பது ... தமோ குணம்     
தனக்கு அடிமையாக இருப்பது ... இரஜோ குணம் 

இறைவனுக்கு அடிமையாக இருப்பது 
 ... சத்துவ குணம்
..................................................
பித்தத்தில் நின்று
      பிதற்றித் திரியாமல்

சித்தத்தில் நின்று
      சிவமறிவ தெக்காலம்?
.............................................
புறத்தினில் நாடு
அகத்தினில் தேடு

சுற்றிடும் குதிரை
சுவற்றினில் ஏறும்

முற்றிய கனியும்
முகத்திடை வீழும்

தேடிய அமைதி
திரையினில் தோன்றும்

பிறப்பினை அறுக்கும்
சிறப்பினை அடையும்
..............................................
புள்ளி, கோடு இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்: கோடு என்பது புள்ளிகளின் தொடர்ச்சி; கையை எடுக்காமல் போடப்பட்ட தொடர்புள்ளிகள்.

பிறவிப் பெருங்கடலும் ஒரு கோடு போலத்தான். ஒவ்வொரு பிறவியும் புள்ளியினைப் போன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

எந்தப் பிறவியில் மனிதன் தனது “வாசனா” பெட்டகத்தை உடைக்கின்றானோ, அப்பொழுது அந்தப் பிறவிப் பெருங்கடலாகிய கோடும் முற்றுப்பெறுகிறது.
..................................................
பெற்றது பொய்யுடல்
முன்செய் வினைப்பயன்

உற்றது வெற்றிடம்
உலவிடும் பொருட்பயன்

கற்றது நன்னெறி
கனிந்திடும் நற்பயன்

மற்றது வருவதோ
மன்னவன் அருட்பயன்.
.................................................
பெண் அடிமை ஒழிக என்பதும், பெண் விடுதலை வாழ்க என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறா?

இரண்டும் ஒன்றல்ல. அப்படியானால் பெண் அடிமை ஒழிகின்ற இடத்தில் பெண் விடுதலை ஆரம்பமாகிறதா என்றால், அதுவும் இல்லை.

பெண் அடிமை ஒழிகின்ற இடத்திற்கும், பெண் விடுதலை ஆரம்பிக்கும் இடத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அதனைத் தாங்கி பிடிப்பதுதான் "தாய்மை" எனப்படுவது.

"தாய்மை" என்பது அன்பு, பரிவு, அரவணைப்பு போன்ற நற்பண்புகளை உள்ளடக்கியது; வெறுமனே குழந்தைப் பேற்றை மட்டும் குறிப்பதல்ல.

எப்பொழுது இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளி குறைகிறதோ, அப்பொழுது அந்தப் பெண்ணிடமிருந்து "தாய்மை" நீங்கிவிடுகிறது. 

ஒரு பெண்ணிடமிருந்து "தாய்மை" நீங்கிவிட்டால், அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள கலாச்சாரமும் சீரழியத் தொடங்கி விடுகிறது.
............................................
ஞான மார்க்கத்திற்கு மூலதனம் அறிவு; கர்ம மார்க்கத்திற்கு மூலதனம் தன்முனைப்பு; பக்தி மார்க்கத்திற்கு மூலதனம் அன்பு.

ஆனால், பக்தி மார்க்கத்தில் செல்லவேண்டிய அன்பு, பாசவலையில் மாட்டிக்கொள்வதால், அதில் முழுமை இல்லாமல் போய்விடுகிறது.
.............................................
ஞானம் என்று சொன்னதும் மக்களுக்கு ஒரு குழப்பம் வந்துவிடுகிறது.

ஞானம் முற்றும் துறந்த முனிவர்களுக்கே முடியும். குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நம்மால் இதை நடைமுறைப்படுத்த முடியாது எனப் பலரும் நினைக்கிறார்கள்.

இது ஒரு தவறான கருத்து. ஞானம் என்பது தன்முனைப்பின் (ego) அழிவு. பற்றுதல் ஏதுமற்ற நிலையில், எதையும் எதிர்பார்க்காத வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.

அதன்பின் துக்கம் என்பதே கிடையாது; ஏனெனில் "நான் 'கர்த்தா' அல்ல, வெறும் 'கருவி' மட்டுமே" என உணர்ந்து கொள்கிறோம்.
............................................

நம்மிடம் உள்ள அஹங்காரம் நீர்க்குமிழி போன்றது.

அது ஆழ்மனதில் இருந்து வருகிறது; ஆழ்மனம் ஆற்றில் ஓடும் தண்ணீரைப் போன்றது.

ஆற்றுப்படுகை இல்லையெனில் ஆறு வழிநெடுகிலும் பாய்வதெப்படி? நதிக்கு ஆதாரம் ஆற்றுப்படுகை இருப்பதுபோல், ஆழ்மனதிற்கும், மனிதனின் மற்ற இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பது உள் உறையும் இறைவன். அதனால்தான் "சித்தமிசை குடிகொண்ட இறைவா" என்கிறோம். 
"சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே" என்ற பாடல் நினைவிற்கு வருகிறதா?

ஆற்றுப்படுகை என்று அழைத்தாலும் அது பூமியின் ஒரு சிறு பகுதிதானே! 
அதைப்போன்று சித்தத்தில் உள்ள "சிவம்", நாம் வழிபடும் சிவனின் (இறைவனின்) ஒரு பகுதியே!

இதைத்தான் "பூரணத்திலிருந்து பூரணம்" என்று சொல்கிறார்கள்.
...........................................
நம்மால் எல்லோரையும் நேசிக்கமுடியாமல் போகலாம்; ஆனால், எவரையும் வெறுக்காமல் இருக்கலாம் அல்லவா?
...................................................
நமது பிடிக்குள் எதுவும் இல்லையென்றால், நாம் கடவுளின் பிடிக்குள் வந்துவிடுவோம்.
.....................................
நாலைந்து வழியிருந்தும்
நாயகனைத் தேடி
நாடெல்லாம் சுற்றுகின்றேன்

நடுவீட்டில் எனக்காக நாயகனும் காத்திருக்க 
நாடெல்லாம் தேடி
நாயாக அலைகின்றேன்.
............
நாம் வாழ்கிறோமா அல்லது சாகிறோமா?

இரண்டும் அல்ல; வாழ்வதற்காக செத்துக்கொண்டிருக்கிறோம்.
...............................................
நாயாய் பிறந்து
   பேயாய் திரிந்தாலும்

தாயாய் இருந்து
   தயைபுரிவ தெக்காலம்?
..................................................

நான்மறை நாயகன்
நமக்குள்ளே இருக்கின்றான்

நூலேணி கொண்டு
நுனிக்கொம்பு ஏறாமல்
நூல்மட்டும் நாடினால்
நலமுண்டோ சொல்லேண்டி?
...........................................

“நான்” என்று
    “நான்” நினைத்தது

“நான்” இல்லையென்று
    “நான்” அறிந்தது

“நான்” என்ற
    அகந்தை அழிந்தது
.................................................
நித்தம் விளக்கெரிந்தும் 
நினைவிலது இல்லையடி
சித்தம் கலங்கியதால்
சிந்தனையும் போனதடி

அத்தன் இருப்பிடத்தை
ஆராயத் தெரியாமல்
பெத்தமனம் பித்தாகப்
புலம்பித் தவிக்குதடி
......................................
நினைவின்றி செயலின்றி
நினைமட்டும் நினைக்கின்ற
நிலையெனக்கு அருள்வாயா?
..........................................

மலருக்குள் மலராத
மலரதனைக் காண்பதுபோல்

மறைநின்ற மாமணியை
மனம்காண்ப தெக்காலம்?
 ..............................................
மனதில் இருந்து வருவது இரக்கம்; மனம் இறந்தபின்(?) வருவது கருணை.
..................................................
மனிதனைத் திருத்த வந்த மதத்தை, மனிதன் திருத்த வேண்டும் என்கிறார்கள். 

மதத்தைத் திருத்த வேண்டிய அவசியமில்லை; மதத்தை சரியாகப் புரிந்து கொண்டாலே போதும்.

உண்மையில் திருத்த வேண்டியது, மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத மத வெறியர்களையும், மதத்தைத் தவறாக திரித்துக் கூறும் பகுத்தறிவாளர்களையும்தான்.
……………………………………..
மத வெறியென்று கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆன்மிக வெறியென்று கேள்விப் பட்டிருக்கிறோமா?

ஆன்மிகம் கலவாத மதம் நெறியை மட்டுமின்றி, வெறியையும் வளர்க்கும்; ஆனால், ஆன்மிகம் நெறியை மட்டுமே வளர்க்கும்.
……………………………................
மனதில் இச்சைகள் எழும்பொழுது, இச்சைகளின் பின்னே செல்லாமல் (மனதளவிலும்), அவற்றை வேடிக்கை பார்க்கத் தொடங்கினால் இச்சைகள் மனதிலிருந்து விலகிவிடும்.
..........................................
மாய வலைபின்னி
மயங்கித் திரியாமல்

தூய வலைபின்னி
துயர்துடைப்ப தெக்காலம்?
…………………………………….
மாய விளக்கில்
   மயங்கித் திரியாமல்

தூய விளக்கில்
   துலங்குவது மெக்காலம்?
...............................................
மிதிபட்ட மண், 
பானையாக வேண்டும்; சகதியாகவே இருக்ககூடாது
...................................................
'முன்முடிவின்' துணையின்றி 
மூலத்தை தேடுங்கள்

மூலத்தை தேடுங்கால்
ஞானத்தின் ஒளி பிறக்கும்

ஞானத்தின் ஒளி பிறந்தால்
நேசத்தில் மனம் குவியும்

நேசத்தில் மனம் குவிந்தால்
பாசமெனும் பனி விலகும்

பாசமெனும் பனி விலக
பரம்பொருளின் அருள் சுரக்கும்.
........................................
மேகக் கூட்டங்கள் வானத்தில் மிதக்கின்றன. அதனால் வானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவை மலையில் மோதினால், மலை உடனே அழஆரம்பித்து விடுகிறது.

நாம் சந்திக்கும் அனுபவங்களும் மேகக் கூட்டம் போன்றவைதான். அவைகள் மிதக்கட்டும்; ஆனால், அவைகளை மோத அனுமதிக்காதீர்கள்.
...........................................
விளக்கினை விளக்கி
விளக்க வல்லார்க்கும்

விளங்காத விளக்கை
விளங்கவைப்ப தெக்காலம்?
...................................................
விசயங்களைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது, புரிந்துகொள்ளும் திறமையைப் பொறுத்தது.
நாம் நமது புரிந்துகொள்ளும் திறமையை வளர்த்துகொள்ளும் பொழுது, நமது புரிந்துகொள்ளும் தன்மையில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.

(The level of understanding will depend upon the level of understanding)
........................................
வெற்றிடத்தில் ஓடி
   வெந்துமனம் வாடாமல்

உற்றிடத்தை தேடி
   உறங்குவது எக்காலம்?
..........................................
வெறுப்பு வந்தபின் விலகுவது யதார்த்தம்; விருப்பம் வெறுப்பாக மாறுவதற்குமுன் விலகுவது ஞானம்.
.................................................
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் ..." என்கிறார் திருவள்ளுவர்.

எல்லோராலும் 'வாழ்வாங்கு வாழ' முடியாது போகலாம்; ஆனால், பிறரை வதைக்காமல், வசை பாடாமல் வாழலாம் அல்லவா?
..... ..... ..... ..... .....
வித்துக்குள் வித்தாக
விளைக்கின்ற எம்பெருமான்

சித்துக்குள் சித்தாக
சிதையாமல் இருக்கின்றான்  
………………………………...
வம்பளந்து நாளும்
      வருந்திமனம் வாடாமல்

அம்பலத்து நாயகனின்
      அடிபணிவ தெக்காலம்?
.........................................

வாழ்க்கைத்தரம் (standard of living) முக்கியம்; வாழ்க்கை நெறி (standard of life) அதைவிட முக்கியம் அல்லவா?

தம் பிள்ளைகளிடம் வாழ்க்கைத்தரத்தை முன்னிறுத்தும் பெற்றோர்கள், வாழ்க்கை நெறியை முன்னிறுத்தம் செய்கிறார்களா?!?
..........................................................
நாலைந்து வழியிருந்தும்
நாயகனும் எனக்காக நாடோறும் காத்திருந்தான்

நாயகனைத் தேடி
நாடெல்லாம் சுற்றுகின்றேன்
நடுவீட்டில் அவனிருக்க
நாயாக அலைகின்றேன்.
...............
நான்மறை நாயகன்
நமக்குள்ளே இருக்கின்றான்

நூலேணி கொண்டு
நுனிக்கொம்பு ஏறாமல்
நூல்மட்டும் நாடினால்
நலமுண்டோ சொல்லேண்டி?
...........
நித்தம் விளக்கெரிந்தும் 
நினைவிலது இல்லையடி
சித்தம் கலங்கியதால்
சிந்தனையும் போனதடி

அத்தன் இருப்பிடத்தை
ஆராயத் தெரியாமல்
பெத்தமனம் பித்தாகப்
புலம்பித் தவிக்குதடி
............
உச்சிக்கு கீழமர்ந்து
உறங்காமல் இருக்கின்றான்.

மச்சுவீடு பாதை செல்ல
குச்சியொன்று கையிலுண்டு

மச்சுவீடும் குச்சியும்
மறந்து போன பாவியடி?
............
ஊருக்கெல்லாம் காதலன்
உள்ளொளியாய் இருக்கின்றான்.

கவனத்தில் ஒருமைகண்டால்
காதலனைக் கண்டிடலாம்
கவனமட்டும் புவனத்தில்
கலந்திருப்ப தேனடியோ?
...........
பார்க்குமிட மெல்லாம்
பரமாத்மா என்றார்கள்

நீக்கமற உலகெங்கும்
நிறைந்திருக்கும் தூயவனை
நோக்குமிடம் தெரியாமல்
ஏங்கித் தவிப்பதுஏன்?
.............

ஆடுகின்ற நாயகன்
அரங்கத்தில் இருக்கின்றான்

அரங்கமும் தெரியாமல்
ஆட்டமும் காணாமல்
அங்குமிங்கும் அலைகின்ற
அலங்கோலம் அறியாயோ?
..................
கேள்வி: மனசைப் பிடிக்க முடியலை. அதுதான் எல்லாத்தையும் கொண்டு வருது. அதோட படைப்புகளை அனுபவிக்க முடியுதே தவிர அதோட மூல ஸ்வபாவம் தெரியலை.
என்னுடைய ஸ்வபாவம் ஏன் இன்னும் அனுபவமாகலை? ஆனா இங்கேயே இப்பவே இருக்குங்கறீங்களே!

பதில்: பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
 
ஆன்மீகத்தில் 'அந்தராத்மா' என்றொரு சொற்றொடர் உண்டு. அது ஆன்மா சம்பந்தப்பட்டது என்பார்கள். ஆனால், ஆன்மாவிற்கு 'அந்தர்' (உள்ளே) என ஒன்று உண்டா என்ன? 

'அந்தராத்மா' என்பது ஆழ்மனம் பதிவுகளைக் குறிக்கும் சொல்லாகும். காந்திஜி "நான் எனது அந்தராத்மா என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன்" என்று சொல்வதுண்டு. அதன் அர்த்தம் என்ன?  ஆழ்மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன் என்று அர்த்தம். 

ஆழ்மனதிலும் இரண்டு விதமான பதிவுகள் உண்டு. Iceberg மாதிரி.. நம்மால் உணரக்கூடிய பதிவுகள் மற்றும் நம்மால் உணர முடியாத பதிவுகள். நம்மால் உணர முடியாத பதிவுகள் நமது மூல சுபாவத்தை குறிப்பதாகக் கொள்ளலாம். 

ஒரு உதாரணம் சொன்னால் இதைப் புரிந்து கொள்ளலாம். தவறான வழிகளில் பொருள் சேர்த்து வாழ்க்கையை அனுபவித்த ஒருவன், கடைசி காலத்தில் தான் செய்த தவறுகளுக்கு வருந்தி நல்லவனாக வாழ எண்ணுகிறான்; அதற்காக ஏங்குகிறான். ஆனால், அவன் விதி முடிந்து விடுகிறது. 

அடுத்த பிறவியில் அவனது அந்தராத்மா நல்லவனாக வாழத் துடிக்கிறது; அவன் கொண்டுவந்த 'பிராரப்த கர்மா' அவனை தவறான வழியில் இட்டுச் செல்கிறது. 

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி:-
நீங்கள் விரும்பியவை எல்லாம் கிடைத்து, அவற்றை அனுபவித்து வாழ்ந்தாலும் நிலை கொள்ளாமல் தவிக்கிறீர்கள் என்றால், உங்கள் மூல சுபாவம் (அந்தராத்மா) வேறு ஒன்றிற்காக ஏங்குகிறது என்று அர்த்தம்.
.............. 

கேள்வி: எப்படி அஞ்ஞானத்தை போக்கிக்கறது ?

பதில்: அஞ்ஞானம் என்பது இல்லாத ஒன்று. அது இருட்டைப் போன்றது.

நாம் பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது ஒரு பொருளாக இருக்க வேண்டும் அல்லது ஒரு பொருளிலிருந்து வருவதாக இருக்க வேண்டும்.
(உதாரணம்.. விறகு, நெருப்பு)

அப்படியானால் இருட்டு என்பது என்ன?  அது 'வெளிச்சத்தின் இல்லாமை'. அஞ்ஞானமும் அது போன்றதுதான்; 'ஞானத்தின் இல்லாமை'. அதனால்தான் அதனை
"அவித்யா" (வித்யாவின் இல்லாமை) என்று அழைக்கிறோம்.

மனிதன் ஞான நிலை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. நமக்கான வழியை நாம்தான் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்.

........... 


ச்ரத்தா – அகத்தின் தீபம்


தூய்மையின் தாமரைத் தாளில் எழும் நம்பிக்கையின் ஜ்வாலா —

மங்காத ஒளியாகச் ச்ரத்தா நிலைக்கிறது.


ஒவ்வொரு சாதகரும் தன் உள்ளத்தில் “ச்ரத்தா” எனும் தீபத்தை ஏற்ற வேண்டும்.

அது இல்லாமல் அறிவு தகவலாகவே நிற்கும்;

அது இருந்தால், மௌனம்கூட ஞானமாக மாறும்.

ச்ரத்தா என்பது ஒரு சொல்லல்ல; அது ஒரு நிலை.

அது ஒவ்வொரு உயர்ந்த முயற்சிக்கும் பின்னால் நிற்கும் அமைதியான ஆற்றல்.


நம்பிக்கை மனதை நிலைப்படுத்தும் போது,

பயிற்சி வாழ்வின் பழக்கமாகும் போது,

தடைகளைத் தாண்டும் பொறுமை உறுதியாகும் போது,

பேரிடர்களுக்கு முன் தளராத துணிவு எழும் போது,

சோதனைகளைக் கண்டு சிரிக்கும் சகிப்புத் தன்மை மலரும் போது —

அங்கே ச்ரத்தா ஒளிர்கிறது.


அது ஒரு நம்பிக்கை அல்ல; ஆன்மாவின் நிச்சயம், செயலில் வெளிப்படும் உறுதி.

அறிவு தூரத்தில் தெரிந்தாலும், பாதை நீண்டாலும், அதுவே சாதகரை தாங்குகிறது.

ச்ரத்தா என்பது ஆசையும் அனுபவமும் இணைக்கும் பாலம் —

கற்றதை வாழ்வாக்கும் மௌன சக்தி.


ச்ரத்தா நிலைத்திருக்குமிடத்தில் சந்தேகம் தங்காது;

சந்தேகம் நீங்கும் இடத்திலே, சத்தியம் தானாக வெளிப்படும்.

(ChatGPT-க்கு நன்றி)










Sunday, 18 February 2018

To live in peace



Man is what he thinks.

He thinks according to the impressions recorded ‘within’.

The impressions are recorded while contacting the objects in the world outside.

So the objects in the world outside and the way in which they are being contacted make or mar the man.
Think?
…………………………………………
A man of ‘desire’ can never be in the ‘present’.
……………………………………………
Anybody can hurt me; but, nobody can harm me.
……………………………………………
A man of ‘in-action’ cannot contemplate;

A man of ‘action’ will not contemplate, unless he knows how to withdraw himself from the objective world;

A man of ‘un-action’ will always contemplate, as it is his nature.
…………………………………………
“Argument” means exchange of ‘ignorance’ coming out of ‘emotion’; “Discussion” means exchange of ‘ideas’ coming out of ‘intelligence’.
...........................................
Be present in the “present”.
……………………………………........
Be silent, by silencing the action;
Be silent, by silencing the words;
Be silent, by silencing the thoughts;
Be silent, by silencing the mind;
Be silent without knowing the Silence.

(Be silent — by withdrawing from action.
Be silent — by dissolving the words.
Be silent — by quietening the thoughts.
Be silent — by stilling the mind.
Be silent — until even Silence is not known as silence)
.. Refined by ChatGPT.
……………………………………………..
Be independent, while being interdependent, in order to become indifferent!
…………………………………………
To know the truth, be true to know.
……………………………………………
Best thing in life is to think of unthinkable things.
…………………………………………
Being good is good; but being too good is but bad.
…………………………………………
Be in the family; be far away from the family.
…………………………………………
Be Empty; you will be Full.
……………………………………………
"Be simple; be humble" 
Everybody will come to know .. what is 'WISDOM'.
...................................
Disciple: How to understand what you understand?
Guru: To make you to understand what I understand, first I must understand what you understand!
……………………………………………
‘Desire’ and ‘Divine’ cannot be in the same place.
……………………………………………
Darkness goes from East to West; but if the lights are on, it cannot enter the room. Similarly if the person is enlightened, sufferings cannot enter into his bosom.
…………………………………………………
Darkness means absence of Light; Ignorance means absence of “Wisdom".
............................................
Discussion” means exchange of ‘ideas’ coming out of ‘intelligence’.
...........................................
Everything is nothing except one-thing which is the ‘in-thing’!
……………………………………………
Everything is in space; yet space has nothing.
…………………………………………
Enemy’s worst enemy is the ignorance of the enemy’s enemy.
……………………………………….....
Everybody is having (within him) the source of “Enlightenment”; but, it is covered by “Ego” of the individual concerned. Remove the “Ego”, “Enlightenment” will smile on you.
……………………………………………
Even when you are a ‘Master’, behave like a ‘Servant’; you will get rid of the “Ego”.
……………………………………………
Enlightenment means “mind without any thought”
……………………………………………
Every ‘subject’ may become an ‘object’ at some point of time or other; “SOUL” is the only ‘subject’ which can never become an ‘object’, as it is a part of the “WHOLE-SUBJECT”.
……………………………………………

Earth    .. Absolute consciousness

Riverbed created by the embankment   .. Pure consciousness

Water in the riverbed .. Subconscious mind

Bubble coming out of  the water .. Ego.
...........................................
From being ‘Somebody’, one must become ‘Nobody’; then he will become ‘Everybody’.
............................................
From being a balloon, one must become a flute (i.e. we must become a tool in HIS hands).
............................................

From being 'somebody', one must become 'nobody'; then, he will understand 'everybody' with ease.
.......................................
From being a “human-being”, one must become the real “Being”.
……………………………………………
For a man who thinks, nothing is a problem;
For a man who feels, everything is a problem
…………………………………………………
God make man simple; instead of being humble, he makes him complicated.
……………………………………………
Go beyond the mind through the mind; there lies the “enlightenment”
……………………………………………
How much you learnt is not important; how much you digested is important.
……………………………………………
How to handle the ‘man’ is not the problem; how to handle the ‘mind’ is the problem.
……………………………………………
How much we earn is not the problem; how we earn is the problem.
………………………………………......
How much we spend is not the problem; how we spend is the problem.
…………………………………….........
Question:-
How comes the worry?

Answer:-
It comes because of the problems, we face.

But, who creates the problems? Only incidents happen. We alone convert them into problems.

In the battlefield, Arjuna saw problem in every incident and worried; while Krishna who was with Arjuna saw nothing as a problem and had no worries. Why?

Arjuna saw the incidents with emotion; Krishna saw them with intellect.

Think!
.......................................
Have a vision to have a goal;

Have a goal to have an inspiration;

Have an inspiration to have perfection in action.
...................................
How to live with "ego"; everybody knows it.

How to leave the "ego"; only few people know it.
....................................

It is to be realized that “IT” is to be realized.
……………………………………………
If the mind is controlled by the intellect, man will handle the money;
if the mind cannot be controlled by the intellect, the money will handle the man; in that case the mind will make him mad after money.
……………………………………………
Instead of living in ‘peace’, we are living in ‘pieces’.
……………………………………………
In the world of unfits, the fit will become a mis-fit.
……………………………………………
In the Path of Wisdom, every ‘means’ is an ‘end’ itself; there is no such thing as ‘means to the end’.
……………………………………………
Inward expansion will lead to outward expansion of “God”
……………………………………………..
Knowledge may enrich many-things; but wisdom alone enriches the ‘self’
……………………………………………
Know the ‘within’ to know the ‘without’.
......................................
Knowledge is to be gathered; Wisdom is to be attained.
……………………………………………
Love demands nothing; Lust demands everything.
……………………………………………
Love with a cause is not love.
……………………………………………
Less luggage in the “Mind”; more comfort “in the Life Situation”; make the “Life  Journey” pleasant.
.....................................
Money will not bring you any peace; peace depends upon the mind.
…………………………………………
Many-a-times we work without knowing the work;
Similarly, we live without knowing the “Life”.
……………………………………………
Many things are important in life; but, life is more important than those many things.
.....................................
Nothing enlightens like “Nothing”.
……………………………………………
Nothing is more valuable than 'values'.
……………………………………………
Ordinary love will become a “divine love”, when you regret nothing, demand nothing and expect nothing.
...........................................
One may like to succeed in life; another may like to have peace in life –  when he proceeds to succeed in his endeavour he must know how to enjoy the sufferings he may come across, for they may be the stepping-stones to achieve the desired goal.
……………………………………………
One’s return to the society should be more than what he gets from it.
............................................
One cannot love everybody; but one should not hate anybody.
……………………………………………..
One can see things from one's own angle; from other's angle; and from outside the angle.

When a person sees things from his angle, he will behave like a boss;

When he sees things from other's angle, he will behave like a leader;

When he sees things from outside the angle, he will be fit to behave like a Guide!
...........................................
One’s aim should be to eliminate but not to illuminate the ego.
……………………………………………
One of the duties of the father is to create a gap between the “mother” and the “son
……………………………………………
One must take lessons from one's own mistakes; from others' mistakes also.
……………………………………………
Problem is a problem when we think it as a problem; only incidents happen and we alone convert them into problems.
……………………………………………
'Pleasure' comes from “without”; 'Happiness' comes from “within”

‘Pleasure’ comes because of something; 
'Happiness’ comes in spite of nothing .. It comes from "within" when the mind is empty.
……………………………………………...
Real prestige comes when one leaves the place.
………………………………………
Real strength is never visible.
……………………………………………
Self-respect emanates from 'ego'; try to behave like a man of humiliation.
..........................................

Stress and peace cannot go together;
Where there is stress, there can’t be any peace;
Where there is peace, there can’t be any stress.
……………………………………………
Success comes through the knowledge gained by failures.
.....................................
'Śraddhā' is not just one word.

If an individual has the tendency to adopt the following in his "endeavour", he is doing the thing with 'Sraddha':-
1. Faith
2. Practice 
3. Perseverance 
4. Fortitude 
5. Forbearance
.......................................

The word "wisdom" contains four consonants which indicate the paths to follow, to know truth of "WISDOM".

W:the path of wisdom
S: the path of service
D: the path of devotion
M:the path of   
           meditation
...........................................
Think and Think, just to “not to think”.
............................................
The path of ‘Wisdom’ destroys the “I”;
The path of ‘Devotion’ destroys the “MY”;
The path of ‘Service’ and the path of “Thyaana” take you away from the “I” and “MY”;
In either way, the end result will be the same – the attainment of enlightenment.
…………………………………………………
Think..!
     Why to think?

Think to change!
     Whom to change?

Think to change the self!
     What for?

Think to change the self to know the “SELF”.
..................................................
The foremost duty of the parents is to provoke their children to think.
……………………………………………
That which cannot be said, but should be said, must be said.
…………………………………………………
The mind must die, before the man dies.
…………………………………………………
The ‘Level of Understanding’ will depend upon the ‘Level of Understanding’.
…………………………………………………
To know the Truth, be true to know.
…………………………………………………
The first problem in solving any problem is to accept the problem.
………………………………………….....
Think good; Act better; Deliver the best.
…………………………………………………
To have outer harmony, one has to compromise now and then; but to have inner harmony, one has to ensure that convictions are never compromised.
............................................
The leaves are dancing, but the tree is rooted into the earth.

The mind hovers around without any stoppage; but, the poor man doesn't know how to root into God.
..........................................
To get the 'SELF', forget the self.
..................................................
The duty of the Government is to 'govern' and not to run any business. 
……………………………………….…………
The purpose of the life is to create "not only the best out of the good, but also to create the best out of the worst"
...............................,.........
Unless you suffer, you cannot and will not understand that “the suffering is to the body and not to me “.
......................................
When you are in the ‘means’, don’t involve yourself in the ‘means’; that is ‘Karma Yoga’.
...................................................
Working on the elevation without worrying foundation; will it do good to any nation?
When will we change wrong notion?
…………………………………………………
Where man fails, Nature prevails.
…………………………………………………
When we work for others, God will work for us.
…………………………………………………
“What to do” is not the problem; “How to do what you want to do” is the problem
…………………………………………………
When you treat your son as the ‘other’, you will treat the other as your ‘son’.
…………………………………………………
When the ‘selfgoes out, then the ‘SELF’ comes out.
…………………………………………………
When ‘nothing’ exists in the bosom, then ‘something’ comes out of it; that is “happiness”.
...............................................
Without character education
 It’s a building sans foundation
…………………………………………………
What has happened in the ‘without’ is not the problem; what is happening in the ‘within’ is the problem.
…………………………………………………
Without Ego one cannot ‘grow’;
With Ego one cannot ‘glow’.
…………………………………………………
Work like a bull; live like a beggar; you will come to know 'what is peace'.
................................................
Whatever we see is either an object or comes from an object; 
the ‘darkness’ is neither an object nor comes from an object.
Then what is it? It just means the ‘absence of light’. 
Similarly ‘Avidya’ means the absence of ‘Vidya’.
…………………………………………………
Whatever you see is not God, because he is beyond the obvious.

As long as you are in the obvious, you cannot go beyond the obvious.

Once you go beyond the obvious 
(mentally ), you can safely play in the obvious, because nothing in the obvious will ever hurt you.
…………………………………………………
When you are in the “means”, if you are not in the “expectations out of the means” you are in the “karma-yoga”
…………………………………………………
What we meet is not the problem; how we meet is the problem.
…………………………………………………
Who or what is it that thinks within you? It is your own mind.

When it thinks of the body, you will have to suffer;

When it thinks of the "soul", you will feel the happiness; then you may enjoy even your sufferings.

Ultimately, you will find that your 'ego' is eliminated
.....................................
What is enlightenment?

In ordinary language, we can say that the enlightened person may have this quality ..
"Be silent without knowing the silence".
.........................................
We all know that our mind is connected with the material world. 

But, can we say -- so surely -- that our mind is connected with the spiritual world also?

We may say that we are highly religious; yet, it is not enough.

Unless our mind is connected with the spiritual world, we cannot and will not come to know the "inner peace" which will take one to the "eternal bliss".
..........................................
You may possess many things, yet you are away from everything;
…………………………………………
You may be away from God, yet you are always with the God.
…………………………………………


Brahmin
Kshatriyan
Vysyan
See things from outside the angle
See things from the others’ angle
See things from his own  angle
Adviser
Leader
Boss
Guidanceg
Discussion
Argument
Selfless
Un-selfish
Selfish
Compassion
Conviction
Compulsion
Sublimated ego
Ego
Inflated ego
Open book(without entries)
Open book
Closed book
Acceptance
Accommodation
Arrogance
To forget
To forgive
To punish
Present
Present and future
Past, present & future
All
We
I
concerned with the “motive”                       

concerned with the “motive, action and result”
concerned with the “result”
“Means” only are important
“Means” and “End” are important
“End” alone is important
Peace
power
possession




Śraddhā – The Inner Flame

The lotus of purity upholds the flame of faith — Śraddhā, the light that never flickers.

Introductory Note
Every sincere seeker must kindle within himself the flame of Śraddhā.
Without it, knowledge remains mere information;
with it, even silence becomes wisdom.

Śraddhā – The Inner Flame

Śraddhā is not a single word; it is a way of being.
It is the quiet strength behind every noble endeavour.

When faith steadies the heart,
when practice becomes a habit,
when perseverance holds firm through failures,
when fortitude refuses to bend before adversity,
and when forbearance smiles through the trials of time —
Śraddhā shines forth.

It is not mere belief; it is the soul’s conviction expressed through tireless effort.
It sustains the seeker when knowledge is distant and the path seems endless.
Śraddhā is the bridge between aspiration and realization —
the unseen power that turns learning into living.

Closing Reflection
Where Śraddhā abides, doubt cannot dwell;
and where doubt departs, Truth reveals Itself.

(With sincere thanks to 'chatGPT)