Tuesday, 31 March 2026

திருவாசகம் 51.1

திருவாசகம் 51.1

பதிவு 1


"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே"

.. திருவாசகம் 
51 அச்சோப் பதிகம்..பாடல் 1

இந்தப் பாடல்  பலவிதமான அறநெறிகளை உள்ளடக்கி வைத்துள்ளது. 

அவற்றையெல்லாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால், நமது வாழ்க்கைப் பயணத்தை அமைதியாக, எந்தவித பரபரப்பும் இன்றி, இனிமையாக வழிநடத்த முடியும்.

எனவே மிகவும்  நிதானமாகப் பயணிப்போம்.

பின்வரும் கருத்துக்கள்
எனது பார்வையை அடிப்படையாகக் கொண்டவை. இருந்தாலும் கூடியவரை எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன்.

                             (தொடரும்)